கரும்பு பாரத்துடன் டிராக்டர் சாலையில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சோகத்தூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் இருந்து கரும்புகளை ஏற்றி கொண்டு டிராக்டர்ஓன்று கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சென்று கொண்டிருந்தது. இதனை சுரேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சேத்துப்பட்டு சாலையில் திரும்பும் போது திடீரென டிராக்டர் டயர் வெடித்தது.
இதனால் நிலைதடுமாறிய டிராக்டர் சாலையில் கவிழ்ந்தது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான டிராக்டரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.