TVS கம்பெனி புதிதாக தயாரித்த ‘ BS 6 ஸ்டார் சிட்டி பிளஸ்’ மோட்டார் சைக்கிள் இந்தியாவில் அறிமுகமானது .
TVS மோட்டார் கம்பெனி இந்தியாவில் புதிதாக தயாரித்த ” BS .6 ஸ்டார் சிட்டி பிளஸ்’ மாடல் ‘மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது . இதன் ஷோரூம் விலை ரூ. 62,034 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது .இதன் விலை முந்தைய மாடலை விட RS .7,600 அதிகமானது
TVSஇன் புதிய மாடல்கள் மோனோடோன் மற்றும் டூயல் டோன் என இரண்டு வகையில் கிடைக்கிறது. புதிய TVS BS 6 ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலில் அம்சமான எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், அற்புதமான வடிவமைப்பு கொண்ட கண்ணாடி, ஃபேரிங்கில் சிறிது மற்றத்துடன் அமைக்கப்பட்டு இருக்கிறது . இதனுடன் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், USB மொபைல் சார்ஜர், பின்புறமாக 5 வகையில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன், டூயல் டோன் சீட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது .
மோட்டர் சைக்கிள்களை பொருத்தவரை டி.வி.எஸ். ஸ்டார் சிட்டி பிளஸ் BS .6 மாடலின் 109CC சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு BS .6 ரக என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8 BHP , 8.7 என்.எம். டார்க் செயல்திறன், 4-SPEED கியர்பாக்ஸ் பெற்றுள்ளது .பிரேக்ககிற்கு TVS ஸ்டார் சிட்டி பிளஸ் BS 6 மாடலின் இரண்டு சக்கரங்களிலும் டிரம் பிரேக் பொறுத்தப்பட்டுள்ளது . இந்த பிரேக்குகளுடன் காம்பி பிரேக்கிங் தொழில்நுட்பம் ஸ்டான்டர்டு அம்சமாக அமைக்கப்பட்டுளது .