Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பிரியாணி கடையில்…எஞ்சிய உணவை எலி சாப்பிடும் காட்சி… சமூக வலைதளங்களில் வைரலாக பரவல்…!!!

பிரியாணி கடை பாத்திரத்தில் இருக்கும் எஞ்சிய உணவை எலி சாப்பிடும் காட்சி வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை தாலுகாவில் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நிறைய பிரியாணி கடைகள் இருக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் திருவண்ணாமலையில் உள்ள ஒரு பிரியாணி கடையில் பிரியாணியை வைத்து பரிமாறும் பாத்திரத்தில் இருக்கின்ற எஞ்சிய உணவை எலி ஒன்று சாப்பிட்டுக் கொண்டிருந்தது. இதைப் பார்த்து ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் போட்டு விட்டார். இந்த வீடியோ வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த கடையில் பிரியாணி சாப்பிட்டவர்கள் கடையில் உள்ள பாத்திரங்களை முறையாக பராமரிக்காமல் எலி போன்றவை மக்கள் உண்ணும் உணவை சாப்பிடுகிறது. இதனால் அதில் உள்ள விஷம் உணவை சாப்பிடுபவர்களுக்கு பரவி உடல்நிலை மோசமாகும் நிலை ஏற்படுகிறது.

இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த கடையின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த கடை மட்டுமின்றி மற்ற கடைகளிலும் உணவுப் பொருட்கள், உணவு பரிமாறப்படும் பாத்திரங்கள் போன்றவை முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Categories

Tech |