காரைத் திருடிய இந்திய வம்சாவளி இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர் ஜோஹல் ரத்தோர். இவர் கடந்த ஆகஸ்டு மாதம் ரேஞ்ச் ரோவர் காரை திருடி ஆபத்தான வகையில் சுரங்கப்பாதையில் தவறான வழியில் சென்று வேன் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி இருக்கின்றார். மேலும் அங்கிருந்து தப்பிய ஜோஹலை செல்போன் சிக்னல் மூலமாக போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஏறத்தாழ 6 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பில் சேதவிளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக ஜோஹல் ரத்தோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவரது காரோட்டும் உரிமத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.