வோடாபோன் ஐடியா நிறுவனம் புதிய பிரீபெய்டு சலுகைகள் மூன்றை தற்போது அறிவித்துள்ளது. அதன் விலைகள் ரூ.98, ரூ.195, ரூ.319 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 98 ரூபாய் ப்ரீபெய்டு சலுகையில் 300MB டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் உள்ளிட்ட பலன்கள் 15 நாட்களுக்கு வழங்கப்படும். 195 ரூபாய் பிரீபெய்டு சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 100 எஸ் எம் எஸ், 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது. 319 ரூபாய் பிரீபெய்டு சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினசரி 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.
இதில் 195 மற்றும் 319 ரூபாய் சலுகைகள் 31 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இதனை தேர்வு செய்வோருக்கு வி மூவிஸ் மற்றும் டிவி ஆப் சந்தா இலவசமாக வழங்கப்படும். மேலும் 319 ரூபாய் சலுகையில் பின்ஜ் ஆல் நைட் பலன்கள் வழங்கப்படும். அதில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகின்றது. அது மட்டுமல்லாமல் இதய சலுகையில் வீக்- எண்ட் ரோல் ஓவர் பழங்களும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக பயனர்கள் வார நாட்களில் பயன்படுத்தாத டேட்டாவை வார இறுதி நாட்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மேலும் 319 ரூபாய் சலுகை 2ஜிபி பேக்கப் டேட்டா ஒவ்வொரு மாதமும் எந்தவித கூடுதல் கட்டணமும் இல்லாமல் வழங்கப்படும். இதனைத் தவிர வி நிறுவனம் 29 ரூபாய் மற்றும் 39 ரூபாய் விலையில் 4 ஜிபி டேட்டா வவுச்சர்களை அறிவித்துள்ளது. அதில் 2 ஜிபி மற்றும் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.