Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. 48 நாட்கள் கோடை விடுமுறை… சூப்பர் அறிவிப்பு…!!!!!!!

கடந்த 2 ஆண்டு காலமாக உலகம் முழுவதும் கொரோனா தொற்று  பரவி வருகின்றது. கொரோனா  வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளது. மேலும் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு  நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது.

இந்நிலையில் நடப்பாண்டில் இறுதித்  தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. பள்ளி வேலை நாட்கள் குறைவாக இருந்தாலும் சனிக்கிழமைகளில் விடுமுறை இன்றி பள்ளிகள் வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. மேலும் மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத் தேர்வு நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக இருக்கின்றது.இந்நிலையில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு, இன்று முதல் 48 நாட்கள், கோடை விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கல்வி அமைச்சகத்தின் கேந்திரிய வித்யாலயா, பள்ளிகள் நாடு முழுவதும் செயல்படுகின்றன. ராணுவத்தினர், மத்திய, மாநில அரசின் அலுவலர், ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனத்தினர் ஆகியோரின் பிள்ளைகளுக்கு, முன்னுரிமை அளித்து, இந்த கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகின்றது.மீதமுள்ள இடங்கள் மற்றவர்களுக்கு ஒதுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கே.வி.பள்ளிகளில், ஆண்டு இறுதி தேர்வுகள் நடந்து முடிந்திருக்கின்றன.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும், இரண்டாம் பருவ தேர்வுகள் நடந்து வருகின்றன. மற்ற மாணவர்களுக்கு, புதிய கல்வி ஆண்டு வகுப்புகளும் தொடங்கி விட்டன. இந்த நிலையில் கோடை விடுமுறை மே 4ல் துவங்குவதாக, கே.வி.சங்கதன் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.இதன்படி ஜூன் 20 வரை, 48 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. இந்த அறிவிப்பால் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மிகவும்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |