சென்னை மாநகரப் பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி மூலம் அடுத்து வரும் பேருந்து நிறுத்தம் குறித்த தகவல் தெரிவிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் இந்த வசதி பொருத்தப்பட்ட பொதுமக்களுக்கு வழங்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனைப் போலவே பேருந்துகளில் குற்றங்கள் நடப்பதை தடுப்பதற்கு கேமரா மற்றும் அவசர அழைப்பு பொத்தான் போன்ற வசதிகளும் அளிக்கப்படும் உள்ளது.
சென்னையில் சராசரியாக 32 லட்சம் பேர் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். தினமும் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் பேருந்தின் வருகை நேரம் மற்றும் அவை வந்து கொண்டிருக்கும் இடத்தை உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்காக சென்னை பஸ் என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பேருந்துகளின் இயக்கம் குறித்த தகவலை பொதுமக்கள் தெரிந்து கொள்ள இந்த வசதியை பயன்படுத்தலாம். இந்த செயலி மூலமாக பேருந்தின் வருகை நேரம் மற்றும் இடத்தை துல்லியமாக அறிய முடியும். இந்த செயலியை தங்கள் ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.