Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடி மாவட்டத்தை பனை பொருள் உற்பத்தியில் முதல் மாவட்டமாக்க வேண்டும்”… ஆட்சியர் பேச்சு….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தை பனை பொருள் உற்பத்தியில் முதல் மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ஆட்சியர் கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு உணவுப்பொருள் வளர்ச்சி வாரியம், நெல்லை மாவட்ட பனை பொருட்கள் கூட்டுறவு சம்மேளனம் உள்ளிட்டவை இணைந்து பனைவெல்ல கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு நவீன முறையில் பனை வெல்லம், பனங்கல்கண்டு மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கும் பயிற்சி மற்றும் இலவச உபகரணங்கள் வழங்கும் விழாவானது காயல்பட்டினத்திற்கு அருகே இருக்கும் ஓடைக்கரையில் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் விதைகள் நடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

இன்றைய நிலையில் இளைஞர்கள் இந்த தொழிலை செய்வதற்கு சிரமப்படுகிறார்கள். புதிதாக இந்தத் தொழிலில் யாரும் செய்ய முன்வருவதில்லை. அதனால் இந்த தொழிலை முன்னேற்ற பாதைக்கு எடுத்துச் செல்வதற்காக பனை ஏறுவதற்கான பயிற்சி போன்றவை அளிக்கப்படுகின்றது. பனை ஏறும் தொழிலாளர்கள் மற்றும் அவற்றை சார்ந்தவர்கள் மதிப்புக்கூட்டு பொருட்களாக மாற்றி அதனை விற்பனை செய்து அதிக லாபம் பெறுவதற்கான வழிமுறைகளை செய்ய வேண்டும். பனை பொருட்கள் உற்பத்தியில் தூத்துக்குடி மாவட்டம் முதல் மாவட்டமாக திகழ முயற்சிக்க வேண்டும்” என கூறியுள்ளார் ஆட்சியர். மேலும் இவ்விழாவில் ஆட்சியர் இரண்டு பெண்களுக்கு பதநீர் காய்ச்சிக் கருப்பட்டி தயாரிக்கும் உபகரணங்களை வழங்கினார்.

Categories

Tech |