வாணியம்பாடியில் வணிகர் சங்க இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாளை வணிகர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் திருச்சியில் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் கலந்து கொள்ள உள்ளார்.
இந்நிலையில் வணிகர் சங்க அமைப்பின் சார்பாக அமைப்பினர்கள் கடைகளை அடைத்து மாநாட்டில் பங்கேற்க வணிகர் சங்க உறுப்பினர்களுக்கு வாணியம்பாடியில் துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர் கடையடைப்பு இல்லை என்று துண்டு பிரசுரம் வழங்கினார்கள்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வணிகர் சங்க நிர்வாகிகள் 6 பேர் தாக்கப்பட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இந்நிலையில் வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் தாக்கப்பட்டதை கண்டித்து நாளை கடையடைப்பு என அறிவித்திருக்கின்றார்கள். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகின்றது. இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் கொடுத்ததை அடுத்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.