போரோடியங்கா நகரில் ரஷ்ய ராணுவ படைகள் நடத்திய தாக்குதலில் சேதமடைந்துள்ள கட்டிடத்தின் உள்ளே பூனை சிக்கித்தவித்தது.
உக்ரைன் நாட்டில் கீவ்வின் வடமேற்கில் போரோடியங்கா என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் ரஷ்ய ராணுவ படைகள் நடத்திய தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் சேதமடைந்த அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் பூனை சிக்கி தவித்துக்கொண்டிருந்தது.
இந்தப் பூனையை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் மீட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த பூனைக்கு மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது.