திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையை கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் ஆகியோர் திறந்து வைத்தனர். இதன் மூலம் கோவை திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 94,521 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. முதல் போக பாசனத்திற்கு 4,700 மில்லி கன அடி நீருக்கு குறையாமல் திறக்கப்பட்டுள்ளது.