ஐரோப்பிய சுற்றுப் பயணத்திற்கு அடுத்தகட்டமாக டென்மார்க் நாட்டிற்கு சென்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். இந்த மூன்று நாள் சுற்றுப்பயணத்தை தனி விமானம் மூலம் மேற்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் முதற்கட்ட பயணமாக ஜெர்மனியின் அதிபர் ஒலாப் ஷொல்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மேலும் முக்கிய விவரங்கள் குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளனர். இதனை அடுத்து இவர் ஜெர்மனியிலிருந்து டென்மார்க்கு புறப்பட்டுள்ளார். அங்கு இவரை சந்திக்க ஏராளமான வெளிநாடு வாழ் இந்தியர்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர். மேலும் குழந்தைகளிடம் கொஞ்சி பேசி அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் இரண்டாவது நாள் பயணமாக டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனுக்கு பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் வரவேற்றுள்ளார்.
மேலும் அங்கு பிரதமர் நரேந்திர மோடியை வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் மேளம் வாசித்து நடனமாடி உற்சாகமாக வரவேற்றனர். பின்பு அந்நாட்டுப் பிரதமரின் வீட்டிற்கு சென்ற நரேந்திர மோடி அவருடன் பல்வேறு முக்கிய விபரங்கள் குறித்த ஆலோசனை மேற்கொண்டனர். மேலும் இந்திய நார்டிக் நாடுகளின் மாநாட்டில் ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன், பின்லாந்து போன்ற நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசியுள்ளார். இந்த கொரோனா சூழ்நிலைக்கு இந்திய பொருளாதார மீட்சி, உக்ரைன் ரஷ்யா போர், உலகின் பாதுகாப்பு நிலவரம் உள்ளிட்டவை குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.