உக்ரைன் ரஷ்யா போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க போப் பிரான்சிஸ் தகவல் அனுப்பியுள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இரண்டு மாதங்களாக தொடர்ந்து நீடிக்கும் நிலையில் உக்கிரன் மீதான போரினை ரஷ்யா கைவிட வேண்டும் என்று போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து இத்தாலியை சேர்ந்த பத்திரிக்கை நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் “உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்பாக ரஷ்ய அதிபரான புதினை சந்திக்க மாஸ்கோ செல்ல தயாராக இருக்கிறேன். மேலும் கடந்த 20 நாட்களுக்கு முன்பாக புதினை சந்திக்க தகவல் அனுப்பிய நிலையில் இன்னும் எங்களுக்கு பதில் அளிக்கவில்லை” என்று போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார் .