Categories
பல்சுவை

மிக குறைந்த விலையில் இனி ஸ்மார்ட்போன் வாங்கலாம்…. உடனே கிளம்புங்க…. சூப்பர் அறிவிப்பு….!!!

இன்றைய காலகட்டத்தில் குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வருகின்றன. புதிய புதிய மாடல்களில் ஸ்மார்ட்போன்களும் வந்து கொண்டே இருக்கிறது. குறைந்த விலையில் நிறைந்த தரம் கொண்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையிலான புது மாடல்கள் அவ்வபோது வெளியிடப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக சந்தையில் சமீபத்தில் விற்பனைக்கு வந்த மாடல்களை மக்கள் தேடி வருகின்றனர். ஆனால் அவற்றின் விலை சற்று அதிகமாக இருந்தால் வாங்க முடியாது.

அதனால் ஏதேனும் தள்ளுபடி விலையில் வாங்கி விடலாம் என்று பல மாதங்கள் ஆனாலும் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு இப்போது சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமேசான் நிறுவனம் இந்தியாவில் தனது கோடைக்கால சிறப்பு விற்பனையை தொடங்கியுள்ளது.அதன்படி அமேசான் சம்மர் சேல்ஸ் என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில் நீங்கள் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்க முடியும். அதுமட்டுமல்லாமல் கேஷ்பேக் உள்ளிட்ட சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

ஸ்மார்ட்போன் மட்டுமல்லாமல் லேப்டாப், டிவி மற்றும் வீட்டு உபயோக பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம். ஐசிஐசிஐ, கோடாக்,ஆர்பிஎல் உள்ளிட்ட வங்கிகளின் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஷாப்பிங் செய்தால் அதிகமான சலுகைகளை பெற முடியும். 10% தள்ளுபடி வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் புதிய வாடிக்கையாளர்களுக்கு 250 ரூபாய் வரை கேஷ்பேக் சலுகையும் வழங்கப்பட உள்ளது. இந்த சிறப்பு சலுகை திட்டம் மே 4ஆம் தேதி தான் தொடங்கப்பட்டுள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Categories

Tech |