மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எளாவூரில் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பிளைவுட் தொழிற்சாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், 3 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் மூர்த்தி வேலை தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னை நோக்கி வேகமாக சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மூர்த்தியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.