தொடர்ந்து அதிகரித்து வரும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை பலரையும் கவலையடைய வைத்துள்ளது. ஒவ்வொரு மாதமும் சமையல் சிலிண்டரின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகின்றது. இந்த நிலையில் இலவசமாக சிலிண்டரை பெறலாம். மேலும் பல சலுகைகள் மற்றும் நன்மைகள் கிடைக்கும். இதன் பேடிஎம் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்ய வேண்டும். பழைய வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இலவச சிலிண்டர் வாங்குவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதைப் பெறுவதற்கு சிலிண்டர் முன்பதிவின் போது கட்டணம் செலுத்துவதற்கு முன்பாக ப்ரீ கேஸ் என்ற கூப்பனை நீங்கள் நிரப்ப வேண்டும்.
புதிய வாடிக்கையாளர்கள் தங்களது முதலாவது முன்பதிவு பரிவர்த்தனை செய்யும் போது பிளாட் கேஷ்பேக் அளிக்கப்படுகின்றது. இதற்கு நீங்கள் பஸ்ட் சிலிண்டர் என்ற புரோமோ கோட்டை பயன்படுத்த வேண்டும். இந்த ரீஃபண்ட் சலுகை இன்டேன் கேஸ், ஹெச்பி கேஸ் மற்றும் பாரத் கேஸ் ஆகிய மூன்று எல்பிஜி நிறுவனங்களை சேர்ந்த சிலிண்டர்களுக்கு கிடைக்கின்றது. இதற்கு பிரபலமாக அறியப்படும் பேடிஎம் சேவையில் பதிவு செய்து இந்த சிலிண்டர் புக்கிங் செய்தால் உங்களுக்கு கேஷ்பேக் கிடைக்கும்.
பேடிஎம்-ல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வது எப்படி:
முதலில் பேடிஎம் ஆப்பை டவுன்லோட் செய்ய வேண்டும். பின்னர் அதில் ரீ சார்ஜ் மற்றும் பில் பேமென்ட் என்கின்ற ஆப்ஷனில் கேஸ் புக்கிங் என்பதை தேர்வு செய்ய வேண்டும். எந்த நிறுவனத்திடமிருந்து நீங்கள் சிலிண்டர்களை பெறுகிறார்களோ அதை நிரப்ப வேண்டும். இதற்கு பிறகு உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை குறிப்பிட வேண்டும். பணம் செலுத்துவதற்கான பரிவர்த்தனை தொடங்கும். இதில் பேடிஎம் வாலட், பேடிஎம் யுபிஐ, இன்டர்நெட் பேங்கிங் உள்ளிட்ட அனைத்து வகைகளிலும் பணம் செலுத்தலாம். இப்போது உங்கள் பண பரிவர்த்தனை முடிந்த பிறகு சிலிண்டர் முன்பதிவு செய்யப்படும். பிறகு உங்கள் சிலிண்டர் ஏஜென்சியில் இருந்து எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்யப்படும்.