30 ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனியில் எடுக்கப்பட்ட நரேந்திர மோடியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் பல்வேறு நாடுகளுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைன்-ரஷிய இடையிலான போர் காரணமாக ஐரோப்பிய பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் ஜெர்மனி தலைநகர் பெர்லின் சென்றுள்ளார். அங்கு அவர் அந்நாட்டின் பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸை சந்தித்து இரு தரப்பிலும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். பின்னர் ஜெர்மனி பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி நேற்று டென்மார்க் சென்றார். இதனை அடுத்து டென்மார்க்கில் நடக்கும் இரண்டாவது, இந்தியா – நார்டிக் மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.
இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் டென்மார்க், ஐஸ்லாந்து, பின்லாந்து, ஸ்வீடன் மற்றும் நார்வே போன்ற நாடுகளின் பிரதமர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த ஐரோப்பிய நாடுகளுக்கு மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் 1993ஆம் ஆண்டு நரேந்திர மோடி அமெரிக்காவுக்குப் பயணம் செய்துவிட்டுத் திரும்பியபோது ஜெர்மனி நாட்டில் பிராங்பேர்ட்டில் தங்கியிருந்த போது எடுத்த படம் என அவர் கூறியுள்ளார்.