இன்றைய காலகட்டத்தில் நாணயங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. பத்து வருடங்களுக்கு முன்பு இருந்த நாணயங்களுக்கும் இன்று இருக்கும் நாணயங்களுக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. முன்பு இருந்த நாணயங்களை விட இன்று இருக்கும் நாணயங்களின் அளவு சிறியதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் 25 பைசா மற்றும் 50 பைசா நாணயங்கள் தடை செய்யப்பட்டு விட்டன. அது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா?. இதோ அதற்கான பதிலை பார்க்கலாம்.
பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக சில்லரை நாணயங்களின் புழக்கம் வெகுவாக குறைந்தது. அதனால் 25 பைசா மற்றும் 50 பைசா நாணயங்களுக்கு மதிப்பு இல்லாமல் போனது. அதற்கு நாட்டில் எந்தப் பொருளுமே கிடைக்காது என்ற நிலை உருவானது. அதனால் இந்த நாணயங்களின் தயாரிப்பை ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டது. அதுமட்டுமல்லாமல் நாணயங்கள் தயாரிக்க ஆகும் செலவு அதிகரித்துள்ளது. அது குறித்த அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதன்படி ஒரு ரூபாய் நாணயம் தயாரிக்க அன்றைய காலத்தில் குறைந்த செலவு செய்யப்பட்டது. அதாவது ஒரு ரூபாய் நாணயம் தயாரிக்க 50 பைசா செலவு மட்டுமே.
ஆனால் இன்று என்னவோ ஒரு ரூபாய் நாணயம் தயாரிக்க ரூ.1.11 செலவாகிறது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதனைப் போலவே ஒவ்வொரு நாணயம் தயாரிக்கவும் கூடுதல் செலவு தான் செய்யப்படுகிறது. தற்போது நாணயங்கள் தயாரிப்பு குறைந்து விட்டது. ஏனென்றால் ஒரு வேளை நாணயங்கள் செல்லாமல் போனால் ஒரு ரூபாய் நாணயங்கள் அனைத்தையும் உருக்கி இரண்டு ரூபாய் நாணயமாக மாற்றி விடுவார்கள். அதனால் அரசாங்கம் எப்போதுமே நாணயத்தின் விலையை விட குறைவான விலையில் மெட்டல்களை பயன்படுத்தி தான் நாணயத்தை உருவாக்குவார்கள்.