ஏழை மக்களுக்காக பாத்திமா ஜாஸ்மின் என்கிற ஒரு பெண் செய்த காரியம் கண் கலங்க வைக்கிறது. உலகத்தில் பிறக்கும் அனைவருமே பணக்காரர்கள் இல்லை. இந்தியாவில் மட்டும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. இதில் கேட்பாரில்லாமல் குழந்தைகளால் கைவிடப்பட்டு சாப்பாடு கிடைக்காமல் கஷ்டப்படும் சின்ன குழந்தைகள் கடவுளுக்கு நிகரானவர்கள். நமக்கு எவ்வளவு பணம் இருகிறதோ அதற்கு ஏற்றார்போல் நம்முடைய வாழ்க்கையை நாம் மாற்றிக் கொள்கிறோம். ஆனால் ஒரு நடுத்தர வர்க்கத்தில் பிறந்த பாத்திமா ஜாஸ்மின் என்ற பெண் ஒருவர் இந்த கொடுமையை பார்க்க முடியாமல் தானே முன்வந்து செய்த செயல் செயலை யாராலும் மறக்க முடியாது.
ஆம்… இவர் சென்னையில் மக்கள் ஒன்று கூடும் இடத்தில் எல்லாம் ஒரு ஃப்ரிட்ஜ் வாங்கி வைக்க ஆரம்பித்தார். இந்தப் பெண் ஏன் இவ்வாறு செய்கிறார் என்று அனைவருமே கிண்டல் செய்தனர். ஆனால் நாட்கள் போகப்போக அக்கம் பக்கத்தில் உள்ள மக்கள் தன் வீட்டில் மீதமாக இருக்கும் சாப்பாடுகள் போன்றவற்றை அந்த ஃப்ரிட்ஜில் வைக்க ஆரம்பித்தார்கள். இதையெல்லாம் அங்கிருக்கும் பிச்சைக்காரர்கள் எடுத்து தங்களுடைய பசியை போக்கி கொண்டனர். தன்னைக் கிண்டல் செய்த யாரையும் பொருட்படுத்தாமல் அவர் செய்த செயலால் இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சாப்பாடு கிடைகிறது. பாத்திமா ஜாஸ்மினின் இந்த செயல் அனைவரையும் மெய் சிலிக்க வைப்பது உண்மைதானே.