Categories
பல்சுவை

என்னது….! 1 மணி நேரத்தில உலக பணக்காரர் ஆன நபர்?….. யாரு பா அது…. சுவாரசியமான கதையை பாக்கலாம் வாங்க….!!!!

ஒரு மணி நேரத்தில் உலக பணக்காரர் ஆனவரின் சுவாரசியமான கதையை பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம்.

பல படங்களில் ஹீரோக்கள் ஒரே பாடலில் பணக்காரராக மாறுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் அதெல்லாம் திரைப்படங்களில் மட்டுமே சாத்தியமாகும், நிஜத்தில் சாத்தியமில்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இங்கு ஒருவர் ஒரு மணி நேரத்தில் உலக பணக்காரரானார் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் அதுதான் உண்மை. அமெரிக்காவில் பென்சில்வேனியா என்ற நகரத்தில் இருக்கக்கூடிய ஒரு நபர் ஒரு மணி நேரத்தில் நம்பர் 1 பணக்காரராக மாறியுள்ளார். நாம் தற்போது கூறிக் கொண்டிருப்பது பில்கேட்ஸ் பற்றியோ அல்லது எலான் மஸ்க் பற்றியோ இல்லை.

இவருடைய பெயர் கிரிஸ் ரோனால்டு, இவர் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் சாதாரணமான பணியாளர் தான். ஒருநாள் இவருடைய வங்கி கணக்கை எடுத்துப் பார்க்கும்போது மிகவும் அதிர்ச்சி அடைகிறார். யாரோ ஒருவர் இவருடைய அக்கவுண்டில் 92 டாலர் குவாட்ரலியன்ஸ் பணத்தை போட்டுள்ளார். அதாவது உங்களுக்கு புரியும்படி தெரிவிக்க வேண்டுமென்றால் இந்த உலகத்திலேயே நம்பர் 1 பணக்காரராக இருக்கக்கூடிய எலான் மஸ்க்-இன் மொத்த சொத்து மதிப்பு 300 பில்லியன் டாலர்,  1000 பில்லியன் சேர்ந்தால் தான் ஒரு ட்ரில்லியன், 1000 ட்ரில்லியன் சேர்ந்தால்தான் ஒரு குவாட்ரலியன்ஸ்.  அப்படி என்றால் 92 குவாட்ரலியன்ஸ் என்றால் நீங்களே கணக்குப் போட்டு பாருங்கள்.

இதை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்து, பின்னர் வங்கிக்கு சென்று தனது அக்கவுண்டை எடுத்து பார்த்துள்ளார். அப்போது அவரது பேலன்ஸ் ஜீரோவிலிருந்து உள்ளது. அதன்பிறகுதான் ஒரு விஷயம் தெரியவருகிறது. பேபால் நிறுவனத்தில் நடந்த ஒரு சிறிய தவறு காரணமாக இவரது வங்கி கணக்கிற்கு இவ்வளவு பெரிய தொகை வந்துள்ளது. பின்னர் இதை கவனித்த பேபால் நிறுவனம் அவரது அக்கவுண்டில் இருந்து பணத்தை திரும்பப் பெற்றுக்கொண்டது. எப்படி இருந்தாலும் பணம் இருந்தது ஒரு மணி நேரமாக இருந்தாலும் இந்த உலகத்திலேயே ஒரு மணி நேரத்தில் நம்பர் ஒன் பணக்காரரானவர் இவர் தான்.

Categories

Tech |