திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டையில் அரசு பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஒரு மாணவர் வரவில்லை என்றால் மொத்த பள்ளிக்கூடத்திற்கு விடுமுறை விடுவார்கள் என்பதை நம்ப முடிகிறதா…? அதாவது அந்தப் பகுதியில் இருக்கும் வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்தில் சிலர் வசித்து வந்தனர். அவர்களின் குழந்தைகள் உடுமலையில் இருக்கும் பள்ளிக்கூடத்தில் படித்தனர். அந்த சமயம் பேருந்து நிலையத்தின் விரிவாக்க பணிகள் நடந்தது. எனவே அங்கு வசிக்கும் பொதுமக்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்.
இதனால் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. தற்போது அந்த பள்ளியில் ஒரு மாணவர் மட்டுமே படித்து வருகிறார். 2 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த ஒரு மாணவர் செல்லவில்லை என்றால் பள்ளிக்கு விடுமுறைதான். இந்த பள்ளியில் மாணவர்களை சேர்க்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.