இந்திய அரசாங்கம் அதிகமான பணத்தை அச்சடித்தால் எல்லோரும் பணக்காரர்கள் ஆகலாமா என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும். இந்திய அரசாங்கம் அதிகமான பணத்தை அச்சடித்தால் நமக்கு தேவையான பணம் அனைவரிடமும் இருக்கும். உதாரணமாக பணம் இருக்கிறது என்பதற்காக அனைவரும் தங்கத்தை வாங்கி விடுவார்கள். இதனால் நாட்டில் தங்கமே இல்லாமல் போய்விடும். இதேபோல நம்மிடம் பணம் இருக்கிறது என்பதற்காக அனைத்து பொருட்களையும் வாங்கினால் அடுத்த முறை அந்த பொருள் இல்லாமல் போய்விடும்.
இதனாலேயே இந்திய அரசாங்கம் அதிகமான பணத்தை அச்சிடுவது இல்லை. இதேபோல Zimbabwe என்ற நாட்டில் ஒரு சம்பவம் அரங்கேறியது. அதாவது அதிக பணத்தை அச்சடித்ததால் நாட்டில் வாழும் மக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கினார்கள். அதன்பிறகு அத்தியாவசிய தேவைக்கான பொருட்கள் இல்லாமல் போனது. இதனால் தற்போது அந்த நாட்டில் வாழும் மக்கள் உணவுக்கே சிரமப்படுகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.