உசைன் போல்ட் பற்றி தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. உலக வரலாற்றிலேயே மிக அதிக வேகமாக ஓடக்கூடிய மனிதர் என்று கருதப்படுகிறார். 100 மீட்டர் ஓட்டத்தில் கடந்த காலங்களில் மூன்று முறை புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார். இவரைப் பற்றிய ஒரு சுவாரசியமான விஷயத்தை தான் இந்த தொகுப்பில் நாம் பார்க்கப் போகிறோம். பல விளையாட்டுப் போட்டிகள் இருக்கும் பொழுது உசைன் போல்ட் எதற்காக ஓட்டப்பந்தயத்தை தேர்வு செய்தார் என்பது யாருக்காவது தெரியுமா? இவர் சிறு வயது முதலே பள்ளிப் படிப்பின் பொழுது கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இவர் கிரிக்கெட்டில் பாஸ்ட் பவுலராக ஆக வேண்டும் என்று ஆசை கொண்டிருந்தார்.
இதனால் இவர் தீவிர பயிற்சி மேற்கொண்டு இருந்தார். ஒரு முறை இவர் ஒரு கிரிக்கெட் போட்டியின் போது பவுலிங் போடும் விதத்தைப் பார்த்த பயிற்சியாளர் “உனது ஓடும் திறன் மிகவும் அருமையாக உள்ளது. ஆனால் நீ கிரிக்கெட்டை விட்டுவிட்டு ஓட்டப்பந்தயத்தில் கவனத்தைச் செலுத்து, கிரிக்கெட்டில் நீ வெற்றி பெற்றால் அது ஒரு குழுவின் வெற்றியாகத்தான் பார்க்கப்படும். ஆனால் ஓட்டப்பந்தயத்தில் நீ ஓடி வெற்றி பெற்றால் அது உன்னுடைய தனிப்பட்ட திறனை வெளியில் கொண்டுவரும்” என்று கூறினார். இதைக் கேட்ட உசைன் போல்ட் தனது கிரிக்கெட் கனவை நிறுத்திவிட்டு ஓட்டப்பந்தயத்தில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். இவர் 15வது வயதில் தனது முதல் போட்டியில் யாரும் முறியடிக்க முடியாத பல சாதனைகளை செய்து 8 முறை ஒலிம்பிக் கோல்டு மெடலுடன் மிகப்பெரிய லெஜெண்ட்டாக மாறியுள்ளார்.