Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

கால் பண்ணு….. மெசேஜ் பாரு…. செல்போனில் CONTROL … அசத்தும் TVS iQube …!!

TVS நிறுவனம்t TVS iQube எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு சந்தையில் களம் இறக்கியுள்ளது .

இந்தியாவில பல்வேறு இடங்களில் காற்று  மாசுபாடு மிக பெரும் பிரச்சனையாக உள்ளது . இதனால்  மக்கள்  பார்வை  மின்சார வாகனகள்  பக்கம்  திரும்பியுள்ளது . வாகன  உற்பத்தி  நிறுவனகள் மின்சார வாகனகள் உருவாக்குவதில்  ஆர்வம் காட்டி  வருகின்றன. BAJAJ , HERO ஆகிய நிறுவனங்கள் மின்சார வாகனங்களை  உருவாக்கிவருகிறது . இதனை தொடர்ந்து TVS  நிறுவனமும் மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.

வடிவமைப்பு:

TVS iQube LED  திறன் கொண்ட ஒளிரும் விளக்குகள் முன்புறமும் , பின்புறமும்  பொருத்தப்பட்டுள்ளது. வாகனத்தின் விளக்குகள் பார்ப்பவர்களை கவரும் வகையில் உள்ளது .

செயலி:

TVS iQube மின்சார ஸ்கூட்டரில் DFT திரையுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது . மேலும்  பிரத்யேகமான செயலி ஒன்றும்  பொருத்தப்பட்டுள்ளது . இந்த   செயலி வாடிக்கையாளர்கள் தங்கள்  செல்போனில் இணைத்து கொண்டு செல்போன் மூலம் ஸ்கூட்டரை  கட்டுப்படுத்தலாம் .

LED DISPLAY-ன்   வசதிகள்:

ஸ்கூட்டரில் உள்ள LED  DISPLAY-யில் ஸ்கூட்டரில் எவ்வளவு சார்ஜ் இருக்கிறது , எவ்வளவு தூரம் செல்லும் ,எவ்வளவு மணி நேரம்  வாகனம்  இயங்கும்  மற்றும்  வாகனத்துடன் இணைக்கப்பட்ட  செல்போனில்  எவ்வளவு call  மற்றும்  message  வந்துள்ளது என்பதை காணலாம் .

Image result for TVS iQube

பேட்டரி ரேஞ்ச்:

ECO மற்றும் POWER  என இரண்டு DRAIVING MODE  இந்த  ஸ்கூட்டரில்  உள்ளன. ECO MODE  என்பது 40கி .மீ  வேகத்தில் செல்லும்போது  வாகனம்  இருக்கும் . POWER MODE என்பது 75கி .மீ  வேகத்தில் செல்லும்போது  வாகனம்  இருக்கும்

பாதுகாப்பு வசதி:

TVS iQube ஸ்கூட்டரில் உள்ள  பார்க் அசிஸ்ட் வாகனம் முன்னோக்கி செல்வதை  நிறுத்துவது மட்டும் இன்றி  வாகனத்தை  பின்புறம் ரிவேர்ஸ்  எடுக்கவும்  உதவுகிறது . இது பெண்களுக்கு மிகவும் உதவியாக  இருக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது .

பிரேக் அமைப்பு:

ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் டெலஸ்கோப்பிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின்பக்கத்தில் டூயல் ஷாக் அபஸ்பர்கள் சஸ்பென்ஷன் இருப்பதால் மேடுபள்ளங்களில் இலகுவாக செல்லமுடிகிறது . அதனுடைய, முன்சக்கரத்திலும் பின்புறத்திலும் டிஸ்கப்ராய்ட் இடம்பெற்றுள்ளன. இதன்  அலாய் சக்கரங்கள் அனைவரையும்  ஈர்க்கும் வகையில்அமைந்துள்ளது .

செயல்திறன்:

2.25kWh லித்தயம் அயன் பேட்டரி மற்றும் 4.4W எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது . இது 140 N.M.DARK  திறன் அதிகப்பட்சமாக கிடைக்கும். வீட்டிலுள்ள 5ஏ சார்ஜர் ஐ-கியூப் ஸ்கூட்டர் பேட்டரியை சார்ஜ் செய்ய குறைந்தது 7 மணிநேரமாகும். ஒருமுறை சார்ஜ் செய்தால் இது 75 கி.மீ வரை செல்லும். துவக்க நிலையில் இருந்து 40 கி.மீ வேகத்தை 4.2 விநாடிகளில் எட்டிப்பிடித்து விடும் இந்த ஸ்கூட்டர், மணிக்கு 78 கி.மீ வேகத்தில் செல்லும்.

விலை:

முதன்முதலாக கடந்த சனிக்கிழமை விற்பனைக்கு வந்த  TVS iQube ஸ்கூட்டர்  பெங்களூருவில்  களமிறக்க பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ரூபாய்  5 ஆயிரம் மட்டும் முன்பணம் செலுத்தி, TVS iQube ஸ்கூட்டரை பெற்றுக்கொள்ளலாம்.  இதன் மொத்த மதிப்பு ரூபாய்  1.15 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |