பிரிட்டானியா நிறுவனம் குட் டே, மேரி கோல்டு உள்ளிட்ட பல ரகங்களில் பிஸ்கட்டுகளை உற்பத்தி செய்து வருகிறது. இந்திய பிஸ்கட் மார்க்கெட்டில் பெரும்பங்கு முன்னணி நிறுவனமாக உள்ளது. இந்த நிலையில் இந்நிறுவனம் பிஸ்கட் விலையை 10 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. உலகம் முழுதும் கடந்த சில மாதங்களாகவே பணவீக்கம் கடுமையாக அதிகரித்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் பிஸ்கட்டுகளின் உள்ளீட்டு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பிஸ்கட் விலையை உயர்த்த பிரிட்டானியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே பிஸ்கட் விலையை 7% உயர்த்த உள்ளதாக பிரிட்டானியா நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் பிஸ்கட் உற்பத்திக்கு தேவையான பால், பாக்கெட், சீனி உள்ளிட்ட பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் 10% உயர்த்த திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.