Categories
தேசிய செய்திகள்

இனி யாராலும் தப்ப முடியாது….. தாறுமாறாக வட்டியை ஏத்தும் வங்கிகள்….. புலம்பும் மக்கள்….!!!!

பேங்க் ஆப் பரோடா வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி தங்களின் அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று ரெப்போ வட்டி விகிதம் 4.40 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா மற்றும் தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி தங்களது அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி பேங்க் ஆப் பரோடா வங்கி அடிப்படை வட்டி விகிதத்தை 6.90 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்த வட்டி விகிதம் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி தனது அடிப்படை வட்டி வீதத்தை 8.10 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்த வட்டி விகிதம் மே 4ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அடிப்படை வட்டி விகிதம் உயர்ந்துள்ளதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். அதாவது வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் போன்ற கடனுக்கான இஎம்ஐ தொகை உயரும். வரும் நாட்களில் பல வங்கிகள் அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் எல்லா வங்கிகளிலும் கடன் வாங்கியோர், புதிதாக கடன் வாங்குவோருக்கு இஎம்ஐ கட்டணம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |