Categories
பல்சுவை

58 ஆண்டுகளாக தரையில் தோன்றி…. மிரள வைக்கும் மர்மமான முகங்கள்…. காரணம் என்ன…??

1971 ஸ்பெயினில் மரியோ கோமஸ் என்கிற ஒருவர் அவருடைய குடும்பத்தோடு பல வருடங்களாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென்று ஒருநாள் அவருடைய சமையலறையில் ஒரு வித்தியாசமான விஷயத்தை அவர் பார்த்துள்ளார். அது என்னவென்றால் அவருடைய சமையலறையில் உள்ள தரையில் ஏதோ ஒருவகையான உருவம் தோன்ற ஆரம்பித்துள்ளது. இரண்டு மூன்று நாட்கள் கழித்து பார்க்கும் போது ஒரு மனிதனுடைய முகம் அதில் தோன்றியுள்ளது.

ஆனால் அவர் ஆரம்பத்தில் இதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இருப்பினும் சிறிது நாட்கள் கழித்து அந்த முகங்கள் அனைத்தும் சிரிப்பது போலவே இருந்துள்ளது. இதை பார்த்து அவருடைய குடும்பத்தில் அனைவரும் பயங்கரமாக பயந்துள்ளனர். இதனால் அந்த முகத்தை அழித்து விடலாம் என்று எண்ணிய அவர்கள் தரையில் ஆசிட் உள்ளிட்ட பொருட்களை ஊற்றி துடைத்துள்ளனர். ஆனால் அவர்கள் என்ன செய்தாலும் அந்த முகம் அங்கிருந்து அழியவில்லை.

இதைப் பார்த்த அவருடைய மகன் கோபத்தில் ஒரு மண்வெட்டியை எடுத்துக் கொண்டு வந்து அந்த தரையை அனைத்தும் உடைத்து விட்டு புதிதாக ஒரு தரையை கட்டியுள்ளார். ஆனால் சிறிது நாட்கள் கழித்து அந்த தரையிலும் புது புது முகங்கள் தோன்ற ஆரம்பித்துள்ளது. அது மட்டுமன்றி ஏராளமான முகங்கள் அந்த தரையில் தோன்றியுள்ளது. இந்த விஷயம் பிரபலமாகி இணையதளங்களில் வைரலாக பரவ ஆரம்பித்தது.

இந்நிலையில் வேண்டுமென்றே தரையை உடைத்து யாராவது இதை செய்து கொண்டிருக்கிறீர்களா? என்று ஏராளமான விஞ்ஞானிகள் அதில் சென்று ஆராய்ச்சி செய்தனர். ஆனால் அந்த அறையில் உள்ள முகங்கள் அனைத்தும் மனிதர்களால் வரையப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இன்று வரைக்கும் அந்த தரையில் எப்படி இந்த வித்தியாசமான முகங்கள் தோன்றியது என்பது புரியாத புதிராகவே உள்ளது.

Categories

Tech |