சாண்டா கிளாஸின் நிறம் சிவப்பு என்று தான் நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் சாண்டா கிளாஸின் உண்மையான நிறம் அது கிடையாதாம். அதனுடைய நிறம் முதன் முதலில் பச்சை நிறத்தில்தான் உருவாக்கி இருக்கிறார்களாம். சாண்டா கிளாஸ் ஆடை சிவப்பு நிறத்தில் இருக்கிறது என்றால் அதற்கு ஒரு சுவாரசியமான விஷயம் இருக்கிறது. என்னவென்றால் சாண்டா கிளாஸை நாம் பல வருடங்களாக பார்த்துக்கொண்டு வந்தாலும் இந்த கேரக்டர் முதன்முதலாக 1930 இல் பச்சை நிறத்தில்தான் இருந்தது.
இந்நிலையில் பிரபல கோகோ கோலா நிறுவனம் ஒரு திட்டத்தை வகுத்தார்கள். பொதுவாக குளிர்காலம் வரும் பொழுது மக்கள் குளிர்பானத்தை வாங்குவதை நிறுத்தி விடுவார்கள். இந்த விஷயத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக கோக்க கோலா நிறுவனம் வேறு ஒரு திட்டத்தை கொண்டு வருகிறார்கள். அதாவது அவர்களுடைய குளிர்பான பாட்டில்களில் சாண்டா கிளாஸின் புகைப்படத்தை வைத்தால் ஏராளமானவர்கள் பிசினஸ் கிப்ட் வாங்கி கொடுப்பார்கள் இதனால் விற்பனை அதிகரிக்கும் என்று திட்டம் போட்டார்கள்.
இருப்பினும் இதில் சிறிய பிரச்சினை இருந்துள்ளது. என்னவென்றால் கோகோ கோலா பாட்டிலின் நிறம் சிவப்பு ஆனால் சாண்டா கிளாஸ் நிறம் பச்சை இதனால் இந்த நிறம் சரியாக இருக்காது என்று எண்ணிய அந்நிறுவனம் முதன்முதலாக சாண்டா கிளாஸை பாட்டிலில் சிவப்பு நிறத்தில் டிசைன் செய்தது. இதனால் தான் சாண்டா கிளாஸின் நிறம் சிவப்பு என்று உலகம் முழுவதும் பரவியுள்ளது.