Categories
தேசிய செய்திகள்

பெண்களுக்கு ரூ.25 லட்சம் கடன்…. இப்படி ஒரு திட்டம் இருக்கா? இல்லையா?…. மத்திய அரசு திடீர் விளக்கம்….!!!!

மத்திய அரசே பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அவ்வப்போது செயல்படுத்தி வருகின்றது. அதன்படி பெண் குழந்தைகளுக்கு, விதவைப் பெண்கள், முதியோர்,குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு என பல்வேறு பிரிவுகளின் கீழ் நிதி உதவி மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. அப்படிப்பட்ட ஒரு திட்டம் குறித்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி பிரதான் மந்திரி நாரி சக்தி யோஜனா என்ற திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.2.20 லட்சம் நிதி உதவியும், 25 லட்சம் ரூபாய் கடன் உதவியும் தருவதாக செய்திகள் பரவியது.

பெரும்பாலான பெண்கள் இந்தத் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று முயற்சித்தனர். ஆனால் இப்படிப்பட்ட ஒரு திட்டமே இல்லை என்று தெரியவந்துள்ளது. பிஐபி சார்பாக நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இது ஒரு போலியான திட்டம் என்று தற்போது தெரியவந்துள்ளது.இப்படி ஒரு திட்டம் இல்லை என்றும் பெண்களுக்கு இவ்வளவு லட்சம் கடன் தரும் திட்டம் என்று கூறப்படும் செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்கள் PIB ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் சமூக ஊடகங்களில் குறிப்பாக வாட்ஸ் ஆப்பில் இது போன்ற போலியான செய்திகள் அதிக அளவில் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. இதுகுறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு போதிய அளவு இல்லாத காரணத்தால் சில நேரங்களில் ஏமாறுகின்றனர். அதனால் இது போன்ற போலியான செய்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |