இந்தியாவில் தனிமனித அடையாள ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு ஆதார் கார்டு மிகவும் அவசியம். சிம் கார்டு வாங்குவது முதல் வங்கி கணக்கு வரை அனைத்து விஷயங்களிலும் ஆதார் கார்டு இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்படி முக்கிய ஆவணமாக திகழும் ஆதார் கார்டை வைத்து நிறைய பேர் மோசடி செய்து வருகின்றனர். நம்முடைய ஆதார் கார்டை நமக்கே தெரியாமல் திருடி மோசடி செய்யவும் அதிகம் வாய்ப்புள்ளது. அதனைப்போலவே ஆதார் கார்டு ஜெராக்ஸ் எடுப்பதற்கும் வேறு ஏதாவது காரணத்திற்காகவும் பல்வேறு இடங்களில் விட்டுவிடுவோம்.
இது ஒரு சில சமயங்களில் நமக்கு ஆபத்தாக முடிய அதிக வாய்ப்புள்ளது. அதனால் ஆதார் கார்டு மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஆவணம். இதனை மற்றவர்களிடம் கொடுக்கும்போது அதை தவறாக பயன்படுத்த அதிகம் வாய்ப்புள்ளது. தற்போது ஆதார் கார்டை வைத்து கடன் வாங்கும் வசதியும் அதிகம் உள்ளது. அது மட்டுமல்லாமல் உங்களுடைய வங்கிக் கணக்கில் உள்ள பணம் திருடு போகும் வாய்ப்பு உள்ளது.
இதனால்தான் ஆதார் விவரங்களை யாரிடமும் கொடுக்கக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆதார் தொடர்பான விவரங்களை ஆதார அமைப்பு நிர்வகிக்கிறது. அந்த ஆதார அமைப்பு நம்முடைய தனிநபர் விவரங்களை தவறாக பயன்படுத்தி விடுமோ என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். இதற்கு ஆதாரம் அமைப்பே விளக்கம் கொடுத்துள்ளது.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு ஒன்றில்,தனிநபரின் ஆதார் விவரங்களை வேறு யாருக்கும் கொடுப்பதில்லை என்றும் பாதுகாப்பாக வைக்கப்படும் என்றும் ஆதார் அமைப்பு தெரிவித்துள்ளது. அதனைப் போலவே தனிநபரின் பயோமெட்ரிக் விபரங்களை சேகரித்து வைப்பதில்லை எனவும் கூறியுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு திருட்டு வழக்கில் குற்றவாளியின் கைரேகையை அவரது ஆதார் கைரேகையுடன் ஒப்பிட்டால் பார்ப்பதற்கான கோரிக்கைக்கு ஆதாரமாக இந்த விளக்கத்தை கொடுத்துள்ளது.