கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து ரோபோட் செஃப் ஒன்றிற்கு உணவு வகைகளை சாப்பிட்டு அதனை ருசிபார்க்க பயிற்சி அளித்து வருகிறார்கள். ஒரு உணவை சமைத்து முடித்த பிறகு அதில் எல்லா சுவைகளும் சரியாக இருக்கின்றதா என்று மனிதர்கள் அத்தனை ருசி பார்ப்பது வழக்கம். இந்த வேலையை செய்வதற்கு ரோபோ ஒன்றிற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. அந்த ரோபோ உணவுவகைகளை சாப்பிட்டு ருசி பார்ப்பது மட்டுமல்லாமல் அதில் என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதையும் விளக்கும். இனி வரும் ஆண்டுகளில் மனிதர்கள் இன்று செய்து வரக்கூடிய சமையல் வேலையை ரோபோக்கள் பறித்து கொள்ளுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் இவை நாளடைவில் மனிதர்களை விட சிறப்பாக சமையல் செய்து விடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இந்த ரோபோவை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். இதில் முதற்கட்டமாக முட்டை பொரியல் மற்றும் தக்காளியை வெவ்வேறு விதமாக மென்று சாப்பிட பயிற்சி வழங்கப்பட்டது. அந்த ஆராய்ச்சியில் மூன்று வெவ்வேறு நிலைகளில் மென்று சாப்பிடும் வழிமுறைகளை தொடர்ந்து ரோபோட் ஒன்பது விதமான முட்டை பொரியல் மற்றும் தக்காளிகளை சாப்பிட்டது.
இதன் மூலமாக ஒவ்வொரு உணவிற்கான சுவையை அது அறிந்து கொள்ளும். மேலும் இதிலிருந்து கிடைக்கும் தரவுகளைக் கொண்டு ரோபோட் சமையல் கலையில் புகுத்தி சிறப்பான சமையலை செய்திட வழி வகுத்து விடும். இந்த ரோபோக்கள் விரைவில் ஒவ்வொருத்தரின் விருப்பத்திற்கு ஏற்ப ருசியாகவும் சமைக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.