சில நாடுகளில் பெட்ரோல் மிகக் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகரித்துள்ளது. இங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்க்கும், டீசல் விலை 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை என்பது மக்களுக்கு மிகப் பெரிய பிரச்சனையாகவே இருந்து வருகிறது. இப்படி இருக்கையில் சில நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
அதாவது வெனிசுலாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 1.7 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்பிறகு லிபியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 2.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனையடுத்து ஈரானில் ஒரு லிட்டர் பெட்ரோல் 4 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. உலகின் பெரிய நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருக்கையில் இப்படி சில நாடுகளில் பெட்ரோல் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுவது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. மேலும் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளிலும் பெட்ரோல், டீசல் விலை குறைவாகத்தான் இருக்கும்.