தூத்துக்குடி மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை விவரம் பற்றி ஆட்சியர் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சமையல் எரிவாயு விலை பற்றிய தகவலை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, மே 1 முதல் இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை தூத்துக்குடி- ரூ.1014, கோவில்பட்டி- ரூ.1012.50, கழுகுமலை- ரூ.1021, கயத்தாறு- ரூ.1024, எட்டயபுரம்- ரூ.1012.50 மற்றும் சாத்தான்குளம்- ரூ.1031 என நிரண்யிக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் பாரத் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.1014 , இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1014, என எரிவாயு நிறுவனங்களால் நிர்ணயம் செய்யதுள்ளது என கூறியுள்ளார்.