Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தற்கொலை செய்துகொண்ட தம்பி”…. தம்பி இறந்த சோகத்தில் அண்ணனும் தற்கொலை….!!!!

தம்பி தற்கொலை செய்துகொண்ட சோகத்தில் அண்ணனும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னை மாவட்டத்திலுள்ள கொரட்டூர் எல்லையம்மன் பிரதான சாலையில் வசித்து வருபவர் சுரேஷ். இவரின் அண்ணன் சேட்டு. இவர்கள் இருவரும் கொரட்டூரில் உள்ள ரயில் நிலையம் அருகே தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தனர். சேட்டு சென்ற நான்கு ஆண்டுகளாக தனது குடும்பத்தை விட்டு பிரிந்து தம்பி சுரேஷ் வீட்டின் அருகே தனியாக வசித்து வருகின்றார். சுரேஷ் தனது மனைவி மகனுடன் வாழ்ந்து வருகின்றார். சுரேஷ் குடிபோதைக்கு அடிமையான நிலையில் சென்ற சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் விரக்தியில் இருந்த சுரேஷ் நேற்று முன்தினம் மதியம் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து சேட்டு தனக்கு ஆதரவாக இருந்த தம்பி சுரேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட கவலையில் அவரும் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஒரே நாளில் அண்ணன்-தம்பி என இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதால் உறவினர்கள், நண்பர்களுக்கிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்துகொண்ட இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றார்கள்.

Categories

Tech |