Categories
Uncategorized மாநில செய்திகள்

பிளஸ் 2 எக்ஸாம் ரிசல்ட் எப்போ?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுவையில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு நேற்று முதல் துவங்கியிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் 8.22 லட்சம் பேர் தேர்வெழுதுகின்றனர். அதில் குறிப்பாக 3.91 லட்சம் மாணவர்களும், 4.31 லட்சம் மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர்.

மேலும் மாநிலம் முழுவதுமாக 3,081 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, அரசு தேர்வு இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இத்தேர்வின்போது நடைபெறும் முறைகேடுகளை தவிர்ப்பதற்காக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 37 பேர் கொண்ட உயர்நிலைக் குழு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இக்குழுவின்கீழ் 4000-க்கும் மேற்பட்ட பறக்கும் படை அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  பொய்யாமொழி, சென்னை சாந்தோம் ரபேல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும் இந்த ஆய்வில் முதன்மை கல்வி அலுவலர், தேர்வுத் துறை முதன்மை அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் ஈடுபட்டனர். அதன்பின் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது, இது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு  நடைபெறும் முதல் பொது தேர்வு ஆகும்.

இதையடுத்து இந்த தேர்வு முடிவுகள் வருகிற ஜுலை மாதத்துக்குள் வெளிவரும். அரசு தேர்வுகள் இயக்ககம், இதற்கான ஏற்பாடுகளை எடுத்து வருகிறது. மேலும்  இத்தேர்வில் மாணவர்கள் என்ன எழுதுகிறார்களோ அதற்கான உரிய மதிப்பெண் வழங்கப்படும். மேலும் பேசிய அவர், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் எனவும் மனதைரியத்துடனும், பதற்றப்படாமலும் மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |