பிரியாணி கடை ஒன்றில் உணவு பரிமாறும் பாத்திரத்தில் எலி பிரியாணி தின்பதுபோல் வீடியோ இணையத்தில் பரவி வந்த நிலையில் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு பிரியாணி கடையில் உணவு பரிமாறும் பாத்திரத்தில் எலி பிரியாணி சாப்பிடுவது போல் வீடியோ ஒன்று இணையத்தில் நேற்று முன்தினம் பரவி வந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அந்த பிரியாணி கடைக்கு சென்று ஆய்வு செய்த பொழுது அந்த கடையில் சமையலறை, உணவு சாப்பிடும் இடம், உணவு பார்சல் செய்யும் இடம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்கள்.
மேலும் சமையலறை உள்ளிட்டவற்றை சுத்தமாக வைத்துக் கொள்வது சார்பாக அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதுபற்றி மாவட்ட நியமன அலுவலர் கூறியுள்ளதாவது, இணையத்தில் பரவி வந்த வீடியோ குறித்து சம்பந்தப்பட்ட கடையில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் எலி போன்றவை கடைக்குள் உள்ளே வராத அளவிற்கு கடையில் சில மாற்றங்களை செய்ய உத்தரவிடப்பட்டு இருக்கின்றது.
மேலும் சமயலறையை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து 15 நாட்களில் கடையில் அதிகாரிகள் கூறிய மாற்றங்களை செய்ய காலக்கெடு வழங்கப்பட்டிருக்கின்றது. இதையடுத்து ஆய்வு செய்யும் பொழுது அதிகாரிகள் கூறிய மாற்றங்கள் செய்யப்படாமல் இருந்தால் கடை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என கூறியுள்ளார்.