மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள “12th மேன்” திரைப்படம் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். இந்த படம் ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அணு ஸ்ரீ, லியோனா லிஷாய், அதிதி ரவி, உன்னி முகுந்தன் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சதீஷ் குரூப் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அணில் ஜான் இசையமைத்துள்ளார்.
வருகின்ற மே 20ஆம் தேதி இந்தப் படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது. இந்த நிலையில் தற்போது 12th மேன் படத்தின் டிரெய்லரும் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் 12th மேன் படத்திற்கான ஆவலை மேலும் அதிகரித்துள்ளது.