Categories
தேசிய செய்திகள்

“6 கோப்ரா பாம்புகள்” வீட்டில் வளர்க்கும் 8 வயது சிறுமி…. ஒரு சுவாரஸ்யமான தொகுப்பு….!!

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள். ஆனால் 8 வயது சிறுமி பாம்புகளுடன் சகஜமாக பழகுகிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?. அதாவது உத்திரப்பிரதேசத்தில் உள்ள காட்டாம்பூர் கிராமத்தில் 8 வயதான கஜோல் என்ற சிறுமி வசித்து வருகிறார். இவர்களுடைய குடும்பம் பாம்பு பிடிக்கும் தொழிலை செய்து வருகிறது. இதன் காரணமாக சிறுமிக்கு பாம்பின் மீது அதிக ஆர்வம் இருந்துள்ளது. எனவே சிறுமி பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு பாம்பு பிடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த சிறுமி தன்னுடைய வீட்டில் கொடிய விஷமுள்ள 6 கோப்ரா பாம்புகளை வளர்த்து வருகிறார். இந்த சிறுமி எப்போதுமே பாம்புகள் களுடன் தான் நேரத்தை செலவிடுவார்.

இவர் அதிகாலை தூங்கி எழுந்தவுடன் முதலில் தன்னுடைய பெட்டியில் அடைத்து வைத்திருக்கும் 6 கோப்ரா பாம்புகளை தூக்கிக் கொண்டு ஒரு இடத்திற்கு சென்று சிறிது நேரம் விளையாடுவார். அதன்பின் சாப்பிடும்போது மற்ற அனைத்து நேரங்களிலும் பாம்புகளை தன்னுடன் வைத்திருப்பார். இந்த சிறுமி தூங்கும் நேரத்தில் மட்டும் 6 பாம்புகளையும் ஒரு பெட்டியில் போட்டு அடைத்து வைத்து விடுவார். இந்த சிறுமியை பாம்புகள் பல தடவை கடித்துள்ளது. இருப்பினும் சிறுமி அதை நினைத்து பயப்படாமல் பாம்புகளுடன் பழகுகிறார். இந்த சிறுமியை பாம்பு கடித்தால் அவருடைய தந்தை உடனடியாக விஷம் முறிக்கும் மருந்தை கொடுத்து விடுவாராம். இதனால் சிறுமிக்கு  ஓரிரு நாட்களில் உடல் நலம் சரியாகி விடும்.

Categories

Tech |