அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் ஏன் பச்சைநிற ஆடை அணிகிறார்கள் என்று தெரியுமா? ஆரம்ப காலகட்டத்தில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் போது வெள்ளை நிற ஆடைகளை தான் அணிந்து இருக்கிறார்கள். ஆனால் இருபதாம் நூற்றாண்டில்தான் அறுவை சிகிச்சையின் போது, மருத்துவர்கள் ரத்தத்தை பார்த்து விட்டு வெள்ளை நிற ஆடையை பார்த்தார்கள் என்றால் சில நொடிகளுக்கு அவர்களால் எதையுமே தெளிவாக பார்க்க முடியாது என்பதை புரிந்துகொண்டார்கள்.
அது மட்டும் இல்லாமல் அறுவை சிகிச்சை முடிந்த பிறகு அவர்களுக்கு ஏற்படும் தலைவலிக்கு இது முக்கிய காரணமாக அமைந்து விடும். அதனால் இந்த சிக்கலை தீர்க்க வேண்டும் என்பதற்காக பச்சை மற்றும் நீல நிறம் போன்ற வண்ணம் கொண்ட ஆடைகளை மருத்துவர்கள் அணிகிறார்கள்.