Categories
அரசியல்

குறைந்த வட்டியில் தொழில் தொடங்க ஆசையா?…. 50,000 முதல் 10 லட்சம் வரை கடன்…. இதுவே சூப்பரான திட்டம்….!!!!

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் செய்வோருக்கு குறைந்த வட்டியில் (8%) கடன் தருகிறது MSME அரசு வர்த்தக கடன் திட்டம். 50 ஆயிரம் முதல் 10 லட்சம் வரையில் கடன் பெற முடியும். இந்தத் திட்டத்தின் கீழ் collateral இல்லாமல் கடன் பெற முடியும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் சுமார் 40% இந்த நிறுவனங்களை நம்பி தான் உள்ளது. அதற்காகவே இந்தத் துறையில் முதல்கட்டமாக சரிவில் இருந்து மீட்க வேண்டும் என ஒன்றிய அரசும் ஒன்றிய அரசின் நிதி அமைச்சகமும் அதிக அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்து வருகின்றது.

MSME நிறுவனங்கள்:

இந்தியாவில் உள்ள பெரும்பாலான MSME நிறுவனங்களுக்கு முறையாக நிதி உதவி கிடைப்பது இல்லை. அதற்கு பல காரணங்கள் உண்டு. பொதுவாக இந் நிறுவனங்கள் தங்கள் வர்த்தக கணக்குகளை வைத்திருப்பது இல்லை என குற்றச்சாட்டு வங்கிகளிடமிருந்து எழுந்துள்ளது.இதை மாற்றுவதற்கு மத்திய நிதியமைச்சகம் பல சேவைகளை அறிமுகம் செய்து விரைவாக கடன் பெறுவதற்கான சேவைகளையும் திட்டங்களையும் அறிவித்துள்ளது.

MSME அரசு வர்த்தக கடன் திட்டம்:

இந்த நிறுவனங்களுக்கான ஒர்கிங் கேப்பிட்டல் உருவாக்கும் விதமாக மத்திய அரசு உருவாக்கிய திட்டம் தான் இந்த திட்டம். இந்தத் திட்டத்தின் மூலமாக MSME நிறுவனங்கள் வெறும் 59 நிமிடத்தில் ஒரு கோடி ரூபாய் அளவிற்கான கடனுக்கு ஒப்புதல் பெற முடியும். மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் நிறுவனங்கள் வெறும் 8% வட்டியில் அதாவது வெறும் 66 பைசா வட்டியில் கடன் பெறலாம்.

முத்ரா பிசினஸ் லோன்:

இந்தத் திட்டத்தின் கீழ் சிறு வர்த்தகம் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் குறைந்த வட்டியில் கடன் பெறலாம்.பொதுத்துறை வங்கிகள் மட்டுமல்லாமல் தனியார் வங்கிகளுக்கும் கடன் அளிக்கும் காரணத்தால் இந்த நிறுவனங்கள் கடன் பெற அதிக அளவிலான வாய்ப்பு உள்ளது. இதில் மூன்று பிரிவுகள் உள்ளது.

சுசு கடன்- 50 ஆயிரம் ரூபாய் வரை கடன்
கிஷோர் கடன்- 5 லட்சம் ரூபாய் வரை கடன்
தருண் கடன்- 10 லட்சம் ரூபாய் வரை கடன்

உத்தியோகினி திட்டம்:

இந்தத் திட்டம் முழுக்க முழுக்க பெண்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு வாய்ந்த கடன் திட்டம்.பெண்கள் தொழில் தொடங்க விரும்பினால் இதுதான் சரியான திட்டமாக இருக்கும்.இந்தத் திட்டத்தின் கீழ் 15 லட்சம் ரூபாய் வரையிலான கடனை 18 வயது முதல் 55 வயதுடைய பெண்கள் வாங்கலாம். மேலும் இந்த கடன் 15 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக குடும்ப வருமானம் கொண்டவர்களுக்கு வழங்கப்படுவது இல்லை.

இதனைத் தவிர MSME நிறுவனங்களுக்கு பைனான்ஸ், மார்க்கெட், டெக்னாலஜி மற்றும் இதர சேவைகளை நாடு முழுவதும் இருக்கும் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே நேஷனல் ஸ்மால் இன்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் மானியம் அமைப்பு இரு திட்டங்களை உருவாக்கி உள்ளது.
1. மார்க்கெட்டிங் சப்போர்ட் ஸ்கீம்
2. கிரெடிட் சப்போர்ட் ஸ்கீம்

Categories

Tech |