Categories
பல்சுவை

60 ஆயிரம் கிலோ எடையுள்ள திமிங்கலம்….. கடலில் கொண்டு சேர்த்தது எப்படி…?? 20 மணி நேர போராட்டம்…!!

சீனாவில் இருக்கும் துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடற்கரையில் மிகப்பெரிய திமிங்கலம் கரை ஒதுங்கியது. இதன் எடை 60 ஆயிரம் கிலோ ஆகும். ஆழமான கடலில் இருந்து சுமார் 750 மீட்டர் தொலைவில் இந்த திமிங்கலம் கரை ஒதுங்கியது. இந்த திமிங்கலத்தை கடலில் கொண்டு சேர்ப்பதற்கு துறைமுக ஊழியர்கள் சுமார் 20 மணி நேரம் கடுமையாக போராடுகின்றனர்.

அதற்குள் திமிங்கலம் இறந்து விடக்கூடாது என்பதற்காக அதன் மீது ஊழியர்கள் தண்ணீரை ஊற்றிக் கொண்டே இருந்துள்ளனர். இதனையடுத்து 4 பெரிய கப்பல்களை வைத்து சுமார் 20 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த திமிங்கலத்தை இழுத்து கடலில் கொண்டு சேர்க்கின்றனர்.

Categories

Tech |