பூமியில் வாழும் உயிரினங்களில் யானை மிகவும் அறிவு உள்ளதாகும். இப்படிப்பட்ட ஒரு யானை ஓவியத்தில் அசத்துகிறது என்பதை நம்ப முடிகிறதா…? தாய்லாந்தில் இருக்கும் சூடா என்ற யானை அதன் சிறுவயதிலே தன்னை ஓவியமாக வரைந்து அசத்தியது. தற்போது அந்த யானைக்கு 20 வயது ஆகிறது.
இப்போதும் உலகத்திலேயே சிறந்த பல்வேறு ஓவியங்களை அந்த யானை வரைந்து வருகிறது. 10 வருடமாக ஓவியங்களை விரைந்து வரும் இந்த யானைக்கு பல்வேறு விருதுகளும் கிடைத்தது. இதில் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால் இந்த சூடா யானை வரைந்த ஒவ்வொரு ஓவியமும் 500 டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.