Categories
உலக செய்திகள்

அடப்பாவிங்களா…. இருக்குலாம் Divorce பண்ணுவீங்களா…. என்ன கொடுமை சார்…. நீங்களே இத பாருங்க….!!!!

உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டிலும் வியக்க வைக்கும் நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதன்படி சவுதி அரேபியாவில் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் விவாகரத்து செய்யும் பழக்கம் உள்ளது. அங்கிருக்கும் நடைமுறை மற்ற நாடுகளை விட மாறுபட்டு இருக்கும். அங்கு இருக்கும் நடைமுறை என்னவென்றால், திருமணமான பெண்கள் காபி குடிப்பதை கணவர்கள் தடுக்கக் கூடாது. அப்படி கணவர் காபி குடிப்பதை ஒருவேளை தடுத்தால் அந்தப் பெண் விவாகரத்து வாங்கி விடுவாராம். இந்த காபியால் விவாகரத்து ஆன சம்பவங்கள் நிறைய உள்ளது.

இதனைப் போலவே சமீபத்தில் மற்றுமொரு நிகழ்வும் நடந்தது. அதாவது கணவரும் மனைவியும் சாலையில் நடந்து கொண்டு சென்றிருந்தனர். அப்போது அவரை முந்திக்கொண்டு மனைவி முன்னால் நடந்து சென்றார். அதனால் ஆத்திரமடைந்த கணவர் பின்னால் வா என்று பலமுறை எச்சரித்துள்ளார். ஆனால் மனைவி சொன்ன பேச்சைக் கேட்காமல் அவருக்கு முன்பே நடந்து சென்றார். இதனால் அவர் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.

இதேபோல ஒரு தம்பதியினர் பின்னர் ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது கணவர் மெயின் டிஷ் ஆக ஆட்டுத் தலையை செய்ய சொல்லி இருந்தார். அதை சமைக்கிற மனைவி மறுத்து விட்டார் . அதனால் நண்பர்கள் முன்பு தன்னை அவமானப்படுத்தி விட்டதாக மனைவியை விவாகரத்து செய்து விட்டார் அந்த கணவர். மற்றொரு சம்பவம் காலில் கொலுசு அணிந்து அதற்காக மனைவியை விவாகரத்து செய்துள்ளார் இன்னொரு கணவர். இது போன்ற அற்ப காரணங்களுக்காக விவாகரத்து செய்யும் பழக்கம் பல ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் நடைமுறையில் இருந்து வருகிறது.

Categories

Tech |