கடந்த 2017-ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள ஒரு காட்டில் பயங்கரமாக தீப்பிடித்தது. இந்த காட்டுப் பகுதியில் ஒரு தந்தையும், மகளும் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தனர். இவர்கள் ஒரு நாய் மற்றும் 9 ஆடுகளையும் வளர்த்து வந்தனர். இந்நிலையில் திடீரென காட்டில் தீப்பிடித்ததால் தந்தை மற்றும் மகள் இருவரும் தங்களுடைய சொந்த காரில் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு தங்களுடைய நாயையும் காரில் ஏற்றினர். ஆனால் அந்த நாய்க்கு அவர்களுடன் செல்வதற்கு விருப்பமில்லை. ஏனெனில் தந்தை மற்றும் மகள் வளர்த்து வந்த 9 ஆடுகளும் காட்டில் தனியாக இருந்தது. இந்த ஆடுகளை காப்பாற்ற வேண்டும் என நாய் நினைத்தது. இதனால் நாய் காரிலிருந்து குதித்து கீழே இறங்கியது. அதன் பிறகு தீ மளமளவென பரவியதால் தந்தை மற்றும் மகள் 2 பேரும் சென்றுவிட்டனர். இவர்கள் 2 நாட்கள் கழித்து மீண்டும் காட்டிற்கு திரும்பி வந்துள்ளனர்.
அப்போது அவர்களுடைய வீடு முற்றிலுமாக தீயில் எரிந்து சேதமானது. அவர்கள் 2 பேரும் நாய் மற்றும் ஆடுகள் தீயில் கருகி இறந்திருக்கும் என நினைத்தனர். ஆனால் தந்தை மற்றும் மகன் சத்தத்தை கேட்டு வீட்டின் பின்புறத்திலிருந்து நாய், 9 ஆடுகள் ,மற்றும் 3 மான் குட்டிகளும் ஓடி வந்ததது. இந்த காட்சியை பார்த்தவுடன் தந்தை மற்றும் மகள் 2 பேரும் மிகவும் ஆச்சர்யப்பட்டனர். அதன்பிறகு தான் நாய் 9 ஆடுகள் மற்றும் 3 மான்களை தீயில் இருந்து காப்பாற்றியது தெரியவந்தது. இதுபற்றி பத்திரிக்கையாளர்களுக்கு தெரியவர இந்த செய்தி ஊடகங்களில் வெளியிட்டனர். அந்த சமயத்தில் கலிபோர்னியா முழுவதும் ஒரு நாய் 9 ஆடுகள் மற்றும் 3 மான்களை காப்பாற்றிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.