Categories
பல்சுவை

கடைசி பெட்டியில் X மார்க் ஏன் இருக்குன்னு தெரியுமா….? முழு விவரம் இதோ…!!

நாம் பயணம் செய்யும் ரயில்களின் கடைசி பெட்டியில் ஏன் X மார்க் இருக்கிறது என்பது யாருக்காவது தெரியுமா…? இந்த X மார்க்கை ரயிலில் கடைசி பெட்டியில் அடர் மஞ்சள் நிறத்தில் போட்டிருப்பர். அதன் அருகில் LV என எழுதி இருக்கும். அதன் அர்த்தம் Last Vehicle என்பதாகும். இதனை அடுத்து X மார்க்குக்கு கீழே சிகப்பு கலர் விளக்கு இருக்கும். இவை அனைத்தும் கடைசி பெட்டியில் இருப்பதற்கு ஒரு காரணம் உண்டு. அதாவது ரயில்வே நிலையத்தில் ரயிலின் கடைசி பெட்டியில் X மார்க் இல்லை என்றால் எமர்ஜென்சி என அர்த்தம்.

இந்த X மார்க் உள்ள கடைசி பெட்டி இல்லாமல் போனால் அதனுடன் சேர்ந்த சில பெட்டிகளும் ரயிலை விட்டு கழன்று தனியாக சென்றது என அர்த்தம். இதனாலேயே ஒவ்வொரு ரயில்நிலையம் வந்தவுடன் X மார்க் பெட்டி இருக்கிறதா என்பதை கவனிப்பார்கள். இரவு நேரங்களில் இந்த X மார்க் தெரியாது. எனவே அதற்கு கீழே இருக்கும் சிகப்பு விளக்கை வைத்து கடைசி பெட்டி இருக்கிறது என்பதை உறுதி செய்வர்.

Categories

Tech |