Categories
மாநில செய்திகள்

OMG: ஷவர்மா சாப்பிட்ட 3 பேர் அவசர பிரிவில் அட்மிட்…. தமிழகத்தில் பரபரப்பு…..!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாட்டில் ஷவர்மா சாப்பிட்ட மாணவர்கள் 3 பேருக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டு உள்ளது. அதாவது, உணவு ஒவ்வாமை ஏற்பட்டு பாதிக்கப்பட்ட 3 மாணவர்களும் தற்போது தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஒரத்தநாடு கால்நடை கல்லூரியில் படிக்கும் பிரவீன், பரிமலேஸ்வரன் , மணிகண்டன் போன்றோர் ஒரத்தநாட்டில் உள்ள துரித உணவகத்தில் நேற்றிரவு ஷவர்மா சாப்பிட்டனர்.

இந்த நிலையில் அவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் தற்போது தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 மாணவர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோன்று அண்மையில்  கேரள மாநிலம் காசர்கோடு செருவத்தூர் பகுதியிலுள்ள பேக்கரி ஒன்றில் ஷவர்மா சாப்பிட்ட 16 வயது மாணவி தேவானந்தா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலுள்ள ஷவர்மா கடைகளில் கெட்டுபோன இறைச்சி இருக்கிறதா? என்று உணவுப்பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |