Categories
பல்சுவை

“தானத்தில் சிறந்த தானம் இரத்த தானம்”…. 14 வயதில் வந்த யோசனை…. 22 லட்சம் குழந்தைகளை காப்பாற்றியது….!!

ஆஸ்திரேலியாவில் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர் தான் ஜேம்ஸ் ஹாரிசன். இவருடைய 14-வது வயதில் இவருக்கு ஒரு பெரிய சர்ஜரி பண்ண வேண்டியதிருந்தது. அந்த சர்ஜரியில் இவருடைய உடலில் இருந்து 2 லிட்டருக்கும் அதிகமான ரத்தம் வெளியேறியுள்ளது. ஆனால் இவர் மோசமான நிலைமையை அடையாமல் உயிர் பிழைத்துள்ளார். அந்த சமயத்தில் அவருக்கு ஒரு யோசனை வருகிறது. அது என்னவென்றால் “அடையாளம் தெரியாதா ஒரு நபரால் தான் நமக்கு ரத்தம் கிடைத்திருக்கிறது. அவர் கொடுத்த ரத்தத்தில் தான் நாம் உயிர் பிழைத்தோம். இதே போல் நாமும் இரத்த தானம் செய்ய வேண்டும்” என்று நினைத்துள்ளார்.

இதனால் அவருடைய 18வது பிறந்தநாள் அன்று முதல் முறையாக ரத்த தானம் செய்தார். அப்படி ரத்தத்தை தானம் செய்த சில நாட்களில் அதனை டாக்டர் ஆராய்ச்சி செய்தார்கள். இந்த ஆராய்ச்சியில்தான் அவருடைய ரத்தத்தில் ஒரு வகையான disorderஐ சரிசெய்வதற்கான ஆன்டிபாடி இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர் 1173 முறை ரத்த தானம் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர் தன்னுடைய 60வது வயது வரைக்கும் அதுவும் வாராவாரம் ரத்த தானம் செய்து வந்துள்ளார். இப்படி அவர் கடைசியாக 2018ல் அதாவது 81வது வயது வரைக்கும் ரத்த தானம் செய்துள்ளார். இப்படி அவர் அளித்த ரத்தத்தில் இருந்து எடுத்த பிளாஸ்மாவினால் சுமார் 22 லட்சம் குழந்தைகளை காப்பாற்ற முடிந்தது.

Categories

Tech |