Categories
தேசிய செய்திகள்

75-வது சுதந்திர தினம்…. 75 மாவட்டங்களில், 75 டிஜிட்டல் வங்கிகள்….. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் உள்ள பல மாவட்டங்களில் டிஜிட்டல் வங்கிகள் தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதாவது 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கிகள் தொடங்கப்படும் என அறிவித்தார். இந்த வங்கிகளை உருவாக்குவதற்காக ரிசர்வ் வங்கி அதிகாரி அஜய் சவுத்ரி தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு உதவும் வகையில் இந்திய வங்கிகள் சங்கத்தின் அதிகாரி சுனில் மேத்தா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு வங்கிகள் தொடங்குவதற்கான 75 மாவட்டங்களை தேர்வு செய்துள்ளது. இந்த வங்கிகள் வருகிற ஜூலை மாதத்திலிருந்து நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நாட்டில் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் 10 தனியார் வங்கிகள் இணைந்து டிஜிட்டல் வங்கியை தொடங்குவதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளது. இந்த வங்கிகள் வங்கி கிளைகளாக கருதப்படும். இவைகளுக்கு வர்த்தகத்தை விரிவு படுத்துவதற்கான உரிமை உண்டு. இந்த வங்கிகள் வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் கொண்டிருக்க வேண்டும்.

Categories

Tech |