Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“இந்த பொண்ணு எனக்குத்தான்” நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறு…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண்ணை காதலிப்பது தொடர்பாக நண்பர்கள் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பள்ளியாடி கிராமத்தில் ஷைஜூ(20) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான சதீஷ்குமார்(21) என்பவருடன் தினமும் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் ஷைஜூ இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு காதலை வளர்த்தனர். இதுகுறித்து ஷைஜூ சதீஷ்குமாரிடம் தெரிவித்துள்ளார். அப்போது ஷைஜூ காதலித்த அதே இளம்பெண்ணை இன்ஸ்டாகிராம் மூலம் தானும் காதலிப்பதாக சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சதீஷ்குமார் ஷைஜூவை பழிவாங்க திட்டமிட்டார். எனவே மது விருந்துக்கு வருமாறு சதீஷ்குமார் ஷைஜூவை அழைத்தார். இந்நிலையில் விஷ்ணு, ஆனந்தராஜ், சதீஷ்குமார், ராகுல், ஷைஜூ ஆகிய அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது நீ காதலிக்கும் இளம்பெண்ணை மறந்துவிட வேண்டும் என்றும், மீதி காதலித்தால் கொன்றுவிடுவோம் என்றும் சதீஷ்குமார் தனது நண்பர்களோடு இணைந்து ஷைஜூவை மிரட்டியுள்ளார்.

மேலும் அவர்கள் அனைவரும் இணைந்து ஷைஜூவை சரமாரியாக தாக்கினர். இதனை நண்பர்களில் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் வெளியிட்டார். அந்த வைரல் வீடியோவை பார்த்த மண்டைகாடு காவல்துறையினர் புகார் மனுவை பெற்று சதீஷ்குமார் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் சதீஷ் குமார் மற்றும் ஆனந்தராஜ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |