Categories
உலக செய்திகள்

பொது போக்குவரத்து பயணத்தின்போது மாஸ்க் அணிய வேண்டும்…. பிரபல நாடு பரிந்துரை….!!!!!

அமெரிக்க நாட்டில் விமானங்கள்,பேருந்துகள், ரயில்கள், மேலும் பிற போக்குவரத்து சாதனங்களில் பயணிக்கும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவை நீதிமன்றம் அண்மையில் ரத்து செய்தது. இந்நிலையிலும் இதுபோன்ற பொது போக்குவரத்து சாதனங்களில் பயணிக்கும்போது பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அரசு அமைப்பான சி.டி.சி. என்னும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம் பரிந்துரைத்து இருக்கிறது.
இது தொடர்பாக அந்த மையத்தின் இயக்குனர் ரோச்செல் வாலன்ஸ்கி விடுத்துள்ள அறிக்கையில் இருப்பதாவது “நாம் நம்மை கொரோனா தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு பல்வேறு கருவிகளை கொண்டுள்ளோம். அதில் உயர்தர முகக்கவசகங்கள், சுவாசக் கருவிகள் உள்ளிட்டவை அடங்கும்” என கூறியுள்ளார். 2 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோர் முகக்கவசங்களை சரியாக அணிந்துகொண்டு பொது போக்குவரத்து சாதனங்களில் பயணிக்க வேண்டும் என்பது நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையத்தின் முக்கிய பரிந்துரையாகும்.

Categories

Tech |